தேவையான ஆவணங்கள்

புதிய சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

 

  1. புகைப்படம் 4 – வெள்ளை பின்னணி கொண்ட கறுப்பு வெள்ளைப் புகைப்படம்-அளவு (3.5cm×4.5cm) – (கண்ணாடி அணிபவராக இருந்தாலும் கண்ணாடி அணியாமல் எடுத்த புகைப்படம்).
  2. மருத்துவச் சான்றிதல் (அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்)
  3. தேசிய அடையாள அட்டை அல்லது செயல் நிலையில் உள்ள கடவுச் சீட்டு பிரதி – கிராம உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்பட்டது
  4. பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பிரதி – கிராம உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்பட்டது
  5. பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்திலும் தேசிய அடையாள அட்டையிலும் உள்ள உங்களதும் உங்களது முதற்பெயரிற்கும் இடையில் வித்தியாசம் (எழுத்துப் பிழைகள் இருப்பின்) இரண்டு ஆவணங்களிலும் உள்ள பெயர்கள் உங்களதுதான் என முத்திரை மீது கையொப்பம் இட்டு உறுதிப்படுத்தப்பட்ட சத்தியக் கடதாசி
  6. விண்ணப்பதாரி திருமணமான பெண்ணாக இருப்பின் அவரது தேசிய அடையாள அட்டையில் உள்ள முதற்பெயர் அவரது தகப்பனாரது பெயராக இருப்பின் கிராம உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்பட்ட திருமண அத்தாட்சிப்பத்திரத்தின் பிரதி