பாதுகாப்பு

வாகன விபத்துக்கள் ஏற்படுவதற்கான மூல காரணங்கள்

 1. வீதிப்போக்குவரத்து விதிகளைச் சாரதிகளும், தெருக்களை உபயோகிப்பவர்களும் சரியாக அனுசரியாமை.
 2. கவனயீனமாக வாகனங்களைச் செலுத்துதல்/குழப்பமான மனநிலை.
 3. அதிவேகத்ததுடன் வாகனங்களைச் செலுத்துதல்.
 4. தெருக்களிற் செல்வதற்குத் தகுதியற்ற வாகனங்களின் பாவனை.
 5. விபத்துக்கள் ஏற்படக்கூடும் என உணரப்படும் இடங்களில் முன்னெச்சரிக்கையுடன் அவதானமாக உரிய முறையில் வாகனங்களைச் செலுத்துதல்.
 6. பாதுகாப்பான இடைவெளியில் வாகனங்களைச் செலுத்துதல்.
 7. இயலுமானவரை தனது வாகனம் செலுத்தும் ஒழுங்கைச் சரியாகப் பேணல்.
 8. பாதுகாப்பான முந்திச் செல்லும் முறை
 9. இதற்குமுன்னர் தான் பல ஆண்டுகாலம் எந்தவொரு விபத்தையும் சந்திக்கவில்லை என்ற மனோநிலையில், தான்தோன்றித்தனமாக வாகனத்தைச் செலுத்துவதைக் கைவிடல்.

வீதியில் விபத்துக்களைத் தவிர்க்கும் வகையிற் பாதுகாப்பாக வாகனங்களைசெலுத்துவதற்குச் சாரதிகள் முக்கியமாகக் கவனத்தில் எடுக்கவேண்டியவைகள்.

பாதுகாப்பான வாகனச் செலுத்துகை

பாதுகாப்பான முறையில் வாகனத்தைச் செலுத்தும் சாரதியானவர் மற்றைய சாரதிகளின்முறைகேடான வாகன செலுத்துகைக்கும்இ மோசமான தெருக்களின் நிலைமைத்தன்மைகளையும் காலநிலைகளையும் கருத்திற்கொண்டு எந்த நேரமும் முன்னேற்பாடான முறையில் வாகனங்களைச் செலுத்தவேண்டும். அத்துடன் வாகனமானது தெருக்களில் செலுத்துவதற்குரிய நிலையில் உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

யாழ். மாவட்டத்தில் வாகன விபத்துக்கள் விளைவிக்கும் விபத்துக்கள் அதிகரித்துக் கொண்டே காணப்படுகின்றன. அதற்கான காரணங்கள் பின்வருமாறு:-

 1. மது போதையில் வாகனம் செலுத்துதல்
 2. உள் வீதியிலிருந்து மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகளில் வருவோர்கள் பிரதான வீதியில் வருகின்ற வாகனங்களைக் கவனியாது நேரடியாகப் பிரதான வீதிக்குள் நுழைதல்.
 3. நாற்சந்தி(மத்திய வளைவு)களில் வலப்பக்கம் வருகின்ற வாகனங்கள் செல்வதற்கு இடங்கொடாமை.
 4. ஏதோ ஒரு வாகனம் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளபோது அல்லது வாகனம் செல்லுகின்றபோது மோட்டார் சைக்கிளை அல்லது துவிச்சக்கர வண்டியை முன்னோக்கிச் செலுத்துகின்றபோது எதிரே வருகின்ற வாகனம் பற்றி அவதானம் இல்லாமல் வாகனம் செலுத்துதல்
 5. சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தக்கொடுத்தல்
 6. அளவுக்கு அதிகமான வேகத்தில் வாகனம் செலுத்துதல்
 7. வீதியில் ஒரே சமாந்தரத்தில் மூன்று அல்லது நான்கு துவிச்சக்கர வண்டிகளைச் செலுத்துதல்.
 8. பாதசாரிகள் வீதிகளைக் கடந்துசெல்ல அடையாளமிடப்பட்ட இடங்களில் அவர்களுக்கு இடங்கொடாமல் வாகனம் செலுத்துதல்.
 9. திருத்தப்படாத (குறைபாடுள்ள) வாகனங்களை வீதியிற் செலுத்துதல்.
 10. சேதமான தேய்ந்த டயர்களுடன் வாகனங்களைச் செலுத்துதல்.
 11. வீதியில் இடம் உள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்தாது நெரிசலான இடங்களில் வாகனங்களை நிறுத்தி வீதித் தடைகளை ஏற்படுத்தல்.
 12. வீதி வளைவுகளில் எதிரே தெளிவற்றுக் காணப்படுகின்றபோது வாகனங்களை முன்னோக்கி செலுத்தல்.
 13. வலப்பக்க வளைவிற் செல்லுகின்றபோது வாகனத்தை இடதுபக்க ஓரமாய்ச் செல்லாது குறுகிய அளவில் வலது பக்கமாகவே பாரப்படுத்தி வளைவிற் செலுத்துதல்.
 14. இரவு வேளையில் வெளிச்ச விளக்கு இன்றி அல்லது ஒருபக்க வெளிச்ச விளக்குடன் வாகனம் செலுத்துதல்.
 15. இரவு வேளையில் எதிரே வருகின்ற வாகனங்களுக்குத் தமது வெளிச்ச விளக்கைக் குறைக்காமல் (டிம் இன்றி) வாகனத்தை செலுத்துதல்.
 16. இரவு வேளையில் வீதியோரங்களில் வாகனத்தை நிறுத்தி விடப்படுகின்றபோது அபாய விளக்கு எரியப்படவிடாமை.
 17. இரவு வேளையில் துவிச்சக்கர வண்டியில் வெளிச்ச விளக்கு இல்லாமலும்இ பின்பக்கச் சில்லுச் சேர்த்தாங்கியில் (மக்காட்) வெளிச்சம் (சிவப்புக்கல்) இல்லாமற் செல்லுதல்.
 18. தலைக்கவசம் இல்லாமல்(ஹெல்மட்) மோட்டார் சைக்கிளிற் செல்லுதல்.
 19. வீதியைக் கடக்கின்றபோது முதலில் வலப்பக்கமும் பின்னர் இடப்பக்கமும் மீண்டும் வலப்பக்கமும் பாராமல் வீதியைக் கடந்து செல்லுதல்.
 20. பஸ் நிறுத்ப்பட்டுள்ளபோது பின்பக்கம் செல்லாது முன்பக்கத்தால் வீதியைக் கடத்தல்.
 21. பாதாசாரிகள், சைக்கிள்கள் ஓட்டுனர்கள், சாரதிகள் ஆகியோர் இருபக்கங்களும் அவதானம் இல்லாமற் செயற்படல்.
 22. வாகனங்களைச் செலுத்துகின்றபோது கையடக்கத் தொலைபேசியிற் பேசுவதைத் தவிர்த்தல் வேண்டும்.
 23. மேலே உள்ள குறைபாடுகளை அவதானித்துச் செயற்பட்டால் தாங்கள் விபத்துக்களில் இருந்து தப்பித்துக் கொள்வதுடன்இ விலை மதிக்க முடியாத உயிரையும்இதங்களின் பெறுமதியான உடைமையையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்

உங்கள் வாகனத்தின் சரியான செயற்பாடு மற்றும் செம்மையான பராமரிப்பிற்காக

 1. வாகன உற்பத்தியாளரால் பரிந்துரைக்கப்பட்ட எண்ணெய் வகையை (viscosity range and quality standard)இட்டு மாற்றுதலை பரிந்துரைக்கப்பட்ட கால அளவில் எண்ணெய் மாற்றுதலை மேற்கொள்ளுங்கள்.
 2. கியர் அமைப்பின் பாதுகாப்புக்காகவும் செம்மையான செயற்பாட்டுக்காகவும் உற்பத்தியாளரால் பரிந்துரைக்கப்பட்ட எண்ணெயை மாத்திரம் பயன்படுத்தவும். தானே இயங்கும் கியர் அமைப்பென்றால் குறைந்த பட்சம் 30,000 கி.மீ இல் அல்லது உற்பத்தியாளரால் பரிந்துரைக்கப்பட்ட அளவில் எண்ணெயை மாற்றவும்.
 3. வாகனத்தின் குளிரூட்டும் அமைப்பு எஞ்ஜினின் பாதுகாப்பிலும் அதேபோல திறனிலும் தாக்கம் செலுத்துவதால் அடிக்கடி திரவ மட்டத்தை பரிசோதிக்கவும். அதேபோல உயர் நிலையில் Coolant பாவனையில் அமைப்பின் பாதுகாப்பு மற்றும் செயற்பாடு அதிகரிக்கும். எக்காரணத்தைக் கொண்டும் தண்ணீர் மாத்திரம் பயன்படுத்த வேண்டாம்.
 4. காற்றை வடிகட்டும் கருவியை (Air Filter) சரியான நேரங்களில் சுத்தம் செய்வதால் ஆயுள் காலமும் அதன் செயற்பாடும் அதிகரிக்கும்.
 5. தடை அமைப்பு உயிரைப் பாதுகாப்பது குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்கு ஒரு முறையாவது தடைப்பூட்டுத் திரவத்தை (Brake Fluid) மாற்றவும்.
 6. செயற்கை மசகு எண்ணெய் (Synthetic) பாவிப்பதால் எஞ்சின் அதியுயர் பாதுகாப்பினை பெற்றுக்கொள்ளும். எரிபொருள் செயற்பாட்டினையும் அதிகரிக்கும்.

மோட்டார் வாகன சாரதிகளுக்கான அறிவுரைகள்

 1. தாங்கள் வாகனத்தை செலுத்த வேண்டியவராயின் போதைப் பொருட்களின் பாவனைக்கு முன் அது தொடர்பாக சிந்திக்கவும். போதைப் பொருட்கள் உட்கொண்டிருந்தால் வாகனம் செலுத்துவதை தவிர்க்கவும்.
 2. உங்கள் வாகனத்தின் சுக்கான் தடுப்பு ஊதி துடைப்புக் கருவி மற்றும் சைகை விளக்குகள் ஒழுங்காக இயங்குகின்றனவாவெனச் சரியாக அறியவும். டயர்களில் காற்று போதுமான அளவு உள்ளதாவென அறியவும்.
 3. செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் குறைந்த பட்சத்தில் மூன்றாம் தரப்பிற்கு ஏற்படும் விபத்துகள் தொடர்பான காப்புறுதிப் பத்திரம் உங்கள் வசம் இருத்தல் வேண்டும்.ஆங்கில எழுத்துகளுடனான வாகனமாக இருப்பின் வாகன அடையாள அட்டை இருத்தல் வேண்டும்.
 4. முதலாவதாக சாரதி ஆசனம் மற்றும் பிற்பார்க்கும் கண்ணாடியை பொருத்தமான விதத்தில் அமைத்துக்கொள்ளவும்.
 5. உங்கள் வாகனத்தில் ஆசனப்பட்டிகள் பொருத்தப்பட்டிருப்பின் அதனை பயன்படுத்திக்கொள்ளவும். இதன் மூலம் விபத்தின் போது தனக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ளலாம். பலூன் பொருத்தப்பட்டிருக்கும் வாகனமானால் கட்டாயமாக ஆசனப்பட்டிகளை பொருத்தக்கொள்ளல் வேண்டும்.
 6. பயணத்தை துவங்குவதற்கு முன்னர் கண்ணாடியால் பின்புறத்தை பார்த்து தேவையான திசைக்கு சைகை விளக்குகளை இயக்கி ஏனைய வாகனங்களின் வேகத்தை அல்லது ஒழுங்கையை மாற்றுவதற்கு காரணமாகாமல் பயணத்தை ஆரம்பித்தல் வேண்டும்.
 7. நீங்கள் வீதியின் இடது பக்கத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிப்பதாயின் வலது பக்க தோளுக்கு மேலாக தலையைத் திருப்பி பார்த்தால் பின்புறத்தை மிகவும் தெளிவாக பார்த்தலாம்.ஆரம்பிக்கினற போது கிளச் மூலமாக மிகவும் மெதுவாக வாகனத்தை செலுத்தி தேவையான திசைக்கு திருப்பியதன் பின்னர் முற்புறம் தெளிவாக இருப்பின் வேகத்தை அதிகரிக்கலாம்.
 8. மோட்டார் சைக்கிள் செலுத்துவோரும் அவற்றில் பிரயாணிப்பவரும் தலைக்கவசம் அணிந்திருத்தல் அவசியம்.
 9. நீங்கள் வாகனம் செலுத்தப் பயிலுவதாயின் தொடர்புபட்ட ரக வாகனங்களை செலுத்துவதற்கான அனுமதிப்பத்திரம் பெற்ற சாரதியொருவர் உங்களின் ஒரு புறத்தில் இருத்தல் வேண்டும். ஆயினும் அரச அனுமதி பெற்றுள்ள ஒரு சாரதி பயிற்சி நிலையத்தில் ஆரம்பத்திலிருந்து ஒழுங்காக கற்றுக்கொள்வது வரவேற்கத்தக்கதாகும். புpழையான பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டதன் பின்னர் அதனை திருத்துவது கடினமானதாகும்.

வீதியில் வாகனம் செலுத்துகின்ற போது பாதுகாப்புக்காக வேகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

சைகை இல. 52 53

மோட்டார் கோச் மற்றும் லொரி (சுமை ஊர்தி) நகர பிரதேசத்தினுள் ம.கி.மீ 50 நகர பிரதேசத்திற்கு வெளியே ம.கி.மீ 60 மோட்டார் முற்சக்கர வண்டி மற்றும் முற்சக்கர வான் வண்டிகள் அனைத்து வீதிகளிலும் ம.கி.மீ 40 நில வாகனங்கள் அனைத்து வீதிகளிலும் ம.கி.மீ 40 மோட்டார் கார் மோட்டார் சைக்கிள் துவி செயல் மோட்டார் வண்டிகள் மற்றும் மேற் குறிப்பிடப்படாத வாகனங்கள் நகர பிரதேசத்தினுள் ம.கி.மீ 50 நகர பிரதேசத்திற்கு வெளியே ம.கி.மீ 70

வாகனங்களுக்கிடையிலான இடைவெளி

உங்களுக்கு முன்பாக செல்லும் வாகனத்தை நீங்கள் முந்தாமல் உங்களின் வாகனத்தை செலுத்துவதாயின் உங்களது வாகனத்தின் வேகத்தை முன் செல்கின்ற வாகனத்திற்கு சமனாகவோ இல்லையெனில் அதற்கு குறைவாகவோ வைத்துக்கொள்ளவும். நகர்ப்புற நெருக்கடியான பிரதேசங்களில் வேகத்தை குறைத்துக்கொள்ளவும். உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனம் எதிர்பாராத விதத்தில் நிறுத்தப்பட்டால் பாதுகாப்பான முறையில் உங்களின் வாகனத்தை நிறுத்திக்கொள்வதற்கு இயலுமான விதத்தில் போதுமான தூரத்தை இரு வாகனங்களுக்கிடையில் பேணவும். தடுப்பு ஒழுங்காக இருக்கும் வாகனத்தின் வேக அதிகரிப்பிற்கிணங்க தடுப்பை செலுத்தும் போது வாகனம் போய் நிற்கின்ற தூரமும் அதிகரிக்கும். அவை சுமாராக கீழ் காணும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன.

வாகனங்களை நிறுத்தி வைத்தல்

உங்களது வாகனத்தை நிறுத்தி வைத்திட எண்ணுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முடியுமான வரை வாகனத்தை வீதியில் இருந்து அப்பறமாக இருக்கும்படியோ அல்லது வாகனங்கள் நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்திலோ நிறுத்தி வைக்கவும். வாகனங்கள் பயணிக்கும் வீதியில் வாகனத்தை நிறுத்தி வைக்கும் நிலை ஏற்பட்டாலும் முடியுமான வரை வாகனத்தை இடதுபுற ஓரத்திற்கு ஒதுக்கி அத்துடன வீதிக்கு சமாந்தரமாகஇ வாகனங்கள் பயணிக்கின்ற திசைக்கு எதிர் முகமாக இருக்கும் படி நிறுத்திடவும். ஏனையோருக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளை முடிந்த அளவில் குறைக்கும் வகையில் வாகனத்தை நிறுத்தவும். மிக உகந்த விதத்தில் வாகனத்தை நிறுத்துமிடத்தை வீதிச் சைகை 77 காட்டுகிறது. கோணலாக இருக்கும் படி வாகனத்தை நிறுத்த வேண்டுமென வீதிச்சைகைகளால் குறிப்பிடப்பட்டிருந்தால் அதன் பிரகாரம் நிறுத்தவும். நீங்கள் வாகனத்தை ஒழுங்காக நிறுத்திய பின்னர் கைத்தடுப்பை முறையாக செலுத்தி எஞ்ஐpனை நிறுத்தவும். வாகனத்தை ஒருவரின் பொறுப்பில் வைக்காமல் விட்டுச் செல்வதாயின் கூடிய அளவு பாதுகாப்பான முறையில் திறப்பிட்டு போகவும்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் வாகனத்தை நிறுத்தி வைத்தல் கூடாது.

 1. வளைவில் மலை உச்சயில் பாலம் மீது
 2. வீதி ஒடுங்கும் இடங்களில் வீதிக்குரிய பாகங்கள் அல்லது ஒரு வாகனத்தால் பொருளால் வீதியின் அகலம் குறைவடைகின்ற இடங்களில்
 3. ஒற்றை அல்லது இரட்டை வெள்ளை கோடுகள் போடப்பட்டிருக்கும் இடங்களில் கால்நடை தீர்வையில்
 4. பஸ் வண்டி துவிச்சக்கரவண்டி ஒழுங்கையில் அல்லது கூலிவண்டி தரிப்பிடத்தில்
 5. பஸ் வண்டிகள் தரிப்பிடத்திற்கு 15 மீற்றர் எல்லையினுள்
 6. தீ அணைக்கும் நீர்க் குழாயில் இருந்து 15 மீற்றர் தூரத்தினுள்
 7. சந்தியில் இருந்து 25 மீற்றர்களுக்கு உட்பட்ட இடங்களில்
 8. பாதசாரிகள் கடவையிலான சுருள் பிரதேசத்திலோ அதற்கு 25 மீற்றர் பகுதிக்கு உட்பட்டவாரோ
 9. அதிவேக நெடுஞ்சாலையின் மீது
 10. ஒரு இடத்திற்குள் நுழைகின்ற அல்லது வெளியேறுகின்ற வாயிலுக்கு அருகாமையில்

இரவு நேரங்களில் எப்போதுமே வாகனங்கள் பயணிக்கின்ற திசையை முகங்கொண்டு இருக்கும் படியே வாகனத்தை நிறுத்தவது பிரதான வீதியில் என்றால் நிறுத்தல் விளக்குகளை இயக்கவும். வாகனங்கள் நிறுத்துவதை தடை செய்கின்ற சைகைகள் வீதிச் சைகை இல. 35363738 இல் குறிப்பிடப்பட்டுள்ளன. வீதிச் சைகைகள் இல. 6970717273 இனால் திசை பிரதேசம் எல்லை மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ் அறிவுரைகளை எப்போதும் பின்பற்றல் வேண்டும்.

அனர்த்தங்கள் மற்றும் எதிர்பாராத விபத்துகள்

உங்களின் வாகனம் எதிர்பாராத விபத்திற்கோ அல்லது ஏதேனும் அனர்த்தத்திற்கோ உள்ளானால் அதனை வெகு சீக்கரமாக வீதியிலிருந்து அப்புறப்படுத்தவும்.வீதியில் ஏற்படக்கூடிய இடையூறை தவிர்ப்பதன் பொருட்டு வாகனத்தை அப்புறப்படுத்த முன்பு வாகனம் அமைந்துள்ள விதம் தொடர்பாக குறியிடல் பொருத்தமானதாகும். ஊங்களது வாகனத்தை வீதியிலிருந்த அப்புறப்படுத்த முடியாதென்றால் மற்றும் ஏனைய வாகனங்களின் போக்குவரத்திற்கு அபாயகரமான நிலையை ஏற்படுத்துவதாக இருந்தால் வாகனத்தில் நிறுத்தி வைக்கும் விளக்குகள் அல்லது விபத்துக்களை தெரிவிக்கும் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தால் அதனை இயக்கவும். வாகனத்தின் பிற்புறமாக 50 மீற்றர் தூரத்தில் இருந்து வாகனத்தை நெருங்கும் ஏனைய வாகனங்களுக்கு அபாயகரமான நிலையை அறிவிக்கும் கருவியொன்றை சிவப்பு நிற ஒளி வீசும் முக்கோணமொன்றை வைக்கவும். அவ்விடத்தில் வீதி ஒடுங்கியதாக இருந்தால் வாகனத்தின் முற்புறமாக 50 மீற்றர் தூரத்தில் வாகனத்தினை நெருங்கும் ஏனைய வாகனங்களுக்கு அபாயகரமான நிலையை அறிவிக்கும் பொருட்டு மேலும் ஒரு கருவியை பொருத்தவும். இரவு வேளையாக இருப்பின் உங்களது வாகனத்தில் இருந்து 50 மீற்றர் முற்புறமாக அபாயகரமான நிலையை அறிவூட்டும் விளக்குகளை அல்லது நிறுத்தி வைக்கும் விளக்குகளை இயக்கி வைக்கவும். வாகனம் விபத்திற்கு அல்லது அனர்த்தத்திற்கு உள்ளாகி இருப்பது மோட்டார் வாகன வீதியில் என்றால் முக்கியமாக ஏனைய வாகனங்கள் தொடர்பாக கவனத்தில் கொள்ளவும். இத்தகைய சந்தர்ப்பத்தில் தடையேற்பட்டிருக்கும் இடத்திற்கு 150 மீற்றர் முற்புறமாக அபாய நிலையை அறிவிக்கும கருவியை வைக்கவும். தடங்கலை விரைவில் அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும். நீங்கள் செலுத்துகின்ற வாகனம் எதிர்பாராத விபத்திற்குள்ளானால் அவ் வாகனத்தின் சாரதி என்ற வகையில் நீங்கள்

 1.  வாகனத்தை உடனடியாக நிறுத்தவும்.
 2.  உங்களின் பெயர் முகவரி மற்றும் வாகனத்தின் பதிவு இலக்கம் ஆகிய விபரங்கள் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் எவராலாவது கோரப்பட்டால் வழங்கிடவும். பொலிஸ் உத்தியோகத்தர் கிராம சேவகர் பாதிப்படைந்திருக்கும் நபர் பாதிக்கப்பட்ட அல்லது இழப்புகள் ஏற்பட்டுள்ள மிருகத்தின் உரிமையாளர் சொத்துக்களின் சொந்தக்காரன் அல்லது பொறுப்பாளி
 3. விபத்திற்குள்ளான நபர் மயக்கமடைந்திருந்தால் அல்லது விபத்தின் காரணமாக அவரது உய்ர் இக்கட்டான நிலையில் இருப்பதாக உங்களுக்கு தெளிவானால் உடனடியாக சமீபத்திலுள்ள மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு செல்லவும்.
 4. எவராவது ஒருவருக்கு காயம் ஏற்பட்டிருந்தால் வாகனத்தின் வருமான உத்தரவுப் பத்திரம் காப்புறுதிப் பத்திரம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் என்பவற்றை சமர்ப்பிக்க உங்களால் முடியாவிடின் கூடிய விரைவில் அவற்றை சம்பவமேற்பட்ட இடம் சார்ந்த பொலிஸ் நிலையத்திற்கு கையளிக்கவும்.

ஒரு சாரதி அறிந்திருக்க வேண்டியவை

 1. உங்களது வாகனத்தின் வருமான உத்தரவுப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாகன தரத்திற்கு அமைய உங்களது சாரதி அனுமதிப்பத்திரமும் இருத்தல் வேண்டும்.
 2. ஆங்கில எழுத்துக்களுடனான வாகனமொன்றை செலுத்துவதாயின் வருமான உத்தரவுப் பத்திரம் காப்புறுதிபட பத்திரம் சாரதி அனுமதிப்பத்திரம் மேலதிகமாக வாகனத்தின் அடையாளப் பத்திரமும் கையில் வைத்திருக்க வேண்டும்.
 3. ஊங்களின் வாகனத்தின் ஸிவிச் திறப்பை செலுத்தியதுடன் மீற்றர் பலகையில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற விளக்குகள் எரியும்.எஞ்ஜினை இயக்கியவுடன் ஆசனப்பட்டடி மற்றும் கைத்தடுப்பு விளக்குகளைத் தவிர ஏனைய விளக்குகள் அணைந்திடும். ஆசனப்பட்டடி மற்றும் கைத்தடுப்பு விளக்குகள் அவற்றை இயக்கிய பின்னர் அணைந்துவிடும். நீங்கள் வாகனத்தை செலுத்துகின்ற போது மேற் கூறியவற்றில் ஏதாவதொரு விளக்கு எரியுமானால் யாதேனும் ஒரு கோளாறு இருக்கின்றது. உடனடியாக வாகனத்தை நிறுத்தி பரிசோதிக்கவும்.
 4. நீங்கள் வாகனத்தின் கதவுகளை மூடும் போது ஒருவரது கைகள் அல்லது கை விரல்கள் அகப்படாதபடி கவனத்துடன் செயற்படுவதை பழக்கமாகக்கொள்ளவும்.
 5. நீங்கள் பயணத்தை தொடங்குகின்ற போது கைத்தடுப்பை அகற்றுதல் போன்றே பயண இறுதியில் கைத்தடுப்பை செயற்படுத்துவதற்கும் மறந்துவிடாதீர்கள்
 6. உங்களது வாகனம் ஏதேனுமொரு விபத்திற்கு உட்பட்டால் ஏனையோருக்கு இடையூறுகள் ஏற்படாத வகையில் விரைவாக வாகனத்தை வீதியின் ஓரமாக நிறுத்துதல் வேண்டும்.
 7. நீங்கள் வாகனத்தை செலுத்திக்கொண்டிருக்கும் வேளையில் உங்களது கையடக்கத் தொலைபேசி ஒலித்தால் அது அத்தியாவசிய அழைப்பாயின் சைகை செலுத்தி வாகனத்தை ஓரமாக நிறுத்தி கதையுங்கள். கியர் சைகை செலுத்துதல் மற்றும் ஊதி ஒலித்தல எனும் சந்தர்ப்பங்களை தவிர இரு கரங்களையும் சுக்கானில் வைத்துக்கொள்ளவும்.
 8. எதிர்பாராத விதமாக தீ பிடித்தல் அல்லது வாகனம் இழுபட்டுப் போவதைத் தடுக்க உங்களது வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புகையில் எஞ்ஜினை நிறுத்தி ஸிவிச் திறப்பை அணைத்து கைத்தடுப்பை செயற்படுத்தி இருக்க வேண்டும்.
 9. ஒரு வாகனம் உஙகளுக்க முன்னால் சென்று நிறுத்தப்பட்டால் அவ் வாகனத்தின் வீதிப்பக்கத்திலுள்ள கதவுகளை திறப்பதற்கும் அவ் வாகனத்திற்கு முற்புறமாக நடந்து செல்லும் பாதசாரிகள் வீதியை கடப்பதற்கும் வாய்ப்புண்டு.
 10. வாகன விபத்தேற்பட்டால் உடனடியாக பொலிஸாரிடம் அறிவிக்க வேண்டிய ஆகக் கூடிய கால அவகாசம் 24 மணிநேரமே.

தானே இயங்கும் கியர் (Auto Gear) வாகனங்கள்

தானே இயங்கும் கியர் வாகனங்கள் என்பது கிளச் இல்லாமலேயே கியர் போடக்கூடிய தானே கியர் மாறுகின்ற வாகனங்களாகும். தானே இயங்கும் கியாற்ற வாகனங்கள் என குறிப்பிடப்படுவது தற்போது இலங்ழகயில் அதிகமாக காணப்படும் கிளச் மற்றும் கிளச் பெடல் இருக்கம் வாகனங்களாகும். தானே இயங்கும் கியர் வாகனங்களில் கியர் பெடல் மற்றும் அக்ஸலரேடர் பெடல் மாத்திரமே காணப்படும். தானே இயங்கும் கியரற்ற வாகனங்களில் கிளச் பெடல் இடப்பக்கமாகவும் தடுப்பு பெடல் நடுவிலும் மற்றும் அக்ஸலரேடர் பெடல் வலப்பக்கமாகவும் காணப்படும். இலகுவாக செயற்படுத்திட இயலுமான வகையில் கிளச் பெடலில் இடது காலை வைத்துக்கொள்வதற்கும் வலது காலை அக்ஸலரேடர் பெடலின் மீது வைத்துக்கொள்வதற்கும் இவ்வாறாக அமைக்கப்பட்டுள்ளது. அக்ஸலரேடர் பெடலின் மீது வைத்துக்கொண்டிருக்கும் வலது காலை அதனிலிருந்து அகற்றும் ஒவ்வொரு முறையும் தடுப்பு பெடலின் மீது வைத்திட பழக்கப்பட்டால் விபத்துகளை அதிகம் குறைத்துக்கொள்ளலாம்.

எழுத்து மூல பரிசோதனைத்தான தொழில்நுட்ப அறிவு

 1. கிளச் வழுக்குவது (Slipping) என்றால் எஞ்ஐpனின் வேகத்திற்கிணங்க வாகனம் ஓடுவதில்லை என்பதாகும்.(நீங்கள்   வாகனத்தை இயக்க ஆரம்பிக்கும் போது ஏற்படுவது இதுவே)
 2. கிளச் பெடலின் திறந்த தளர்ப்பு (Play) 1/2 அங்குலங்களுக்கிடையில் இருக்க வேண்டும்.
 3. சக்கரத்தில் காற்றளவு கூடுவதால் தேய்ந்து போவது சக்கரத்தின் நடுப் பகுதியே.
 4. சக்கரத்தில் காற்றளவு குறைவடைவதால் தேய்ந்து போவது சக்கரத்தின் இரு புறங்களே.
 5. சக்கரத்தின் ஒரு புறம் மாத்திரம் தேய்ந்து போவது எலய்ன்மன்ட் (Alignment) பாகத்தின் கோளாறினாலேயே.
 6. ஆங்காங்கே சக்கரத்தின் பாகங்கள் தேய்ந்து போவது ஷொக் அப்சோபர் (Shock Absorber) ஒழுங்காக செயற்படாத காரணத்தினாலே.
 7. நீங்கள் வாகனத்தை ஓட்டி செல்லும் வழியில் பட்டரி (Battery) மின்னேற்றம் (உhயசபந) அடையாமையைக் காட்டுகின்ற விளக்கு ஒளிர்ந்தால் முதலாவதாக பரிசோதிக்க வேண்டியது
 8. காற்றாடி பட்டியையே (குயn டீநடவ).
 9. தடுப்பு எண்ணெய் (Break Oil) இடும் வாகனத்தின் தடுப்பை இயக்கியவுடன் பெடல் கீழிறங்கும் நிலை ஏற்படுவது தடுப்பு எண்ணெய் கசிதல் காரணமாகவே.
 10. தடுப்பு எண்ணெய் குறைவா என பார்க்கவும்.
 11. ஒரு மோட்டார் வாகனத்தில் தடுப்பை செலுத்தும் போது இடப்பக்கமாக இழுபட்டு போவதாயின் வலது புற சக்கரத்தில் எண்ணெய் கசிந்தால் தடுப்பை இயக்கும் போது இடப்பக்கத்திற்கு இழுக்கும்.
 12. ஒரு மோட்டார் வாகனத்தில் கியர் மாற்றுவதற்கு கடினமாக இருந்தால் அநேகமாக ஏற்படக்கூடிய கோளாறு கிளச் ஒழுங்காக செயற்படாதமையே.
 13. ஒரு வாகனத்தின் நீர் பம்பி (water Pump) இனால் எஞ்ஜினுக்குள் நீர் பரிமாற்றம் ஏற்படும். இதனால் ரேடியேடரினுள் (Radiater) ஓடும் நீர் குளிரூட்டப்படும்.
 14. மோட்டார் வாகனத்தின் முன் சக்கரங்கள் நடுங்குவதென்றால் சுக்கான் அமைப்பை சார்ந்த போல்ஐாயின்டுகள் தேய்ந்திருக்கும். தேய்ந்துபோன சக்கரங்கள் வாகனத்தின் வழுக்கிப் போகும் வீதத்தை அதிகரிக்கும்.
 15. வாகனத்தில் செல்கின்ற போது தடுப்பு அமைப்பின் வேறு கோளாறுகளின்றி திடிரென கட்டுப்பாட்டு விளக்கு எரிந்தால் தடுப்பு எண்ணெய் உள்ளதாவென பரிசோதிக்கவும்.
 16. நீங்கள் வாகனத்தை ஓட்டுகின்ற போது டயர் எரிகின்ற வாடையோ அல்லது புகையோர் ஏற்படுவதாக அறிந்தால் உடனடியாக வாகனத்தை நிறுத்தி பட்டரி வயர்களை கழற்றிவிடவும். தீப்பிடிப்பதை தடுக்க ஈரலிப்பான புடவைத் துண்டைக்கொண்டு அந்த இடத்தை மூடிவிடவும்.
 17. ரேடியேடருக்கு நீரூற்றியில்லாத போது அல்லது நீர் கசிவு ஏற்பட்டால் வாகனம் பயணிக்கின்ற போது எஞ்ஜினை (குளிரூட்டிட நீர் தேவைப்படும் காரணமாக) டீபரன்சலால் ஏற்படும் பலன் யாதெனில் இரு புறத்திலான சக்கரங்களின் வேகத்தையும் வளைவின் போது கட்டுப்படுத்துவதாகும்.
 18. தொழில்நுட்ப கோளாரொன்றின் போது காற்றாடிப் பட்டியை முதலாவதாக பரிசோதிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள்.
 • பட்டரி மின்னேற்றப்படாமையின் போது
 • பயணிக்கையில் எஞ்ஜின் அதிகளவு சூடாகுமென்றால்
 • எஞ்ஜினை இயக்குகின்ற போது மோட்டாரின் வேகம் குறைந்திருப்பதாக தெளிவானால்
 • ஊதியின் ஒலி குறைந்திருந்தால்

 

 

தப்பான எண்ணங்கள்

 1. கன ரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகாமல் போனதும் அதில் உள்ளடங்கும் ஏனைய வாகனங்களையும் செலுத்த முடியாது. புதுப்பிக்க வேண்டும்.
 2. நீங்கள் வாகனத்தின் ஊதியை தொடர்ந்து ஒலித்த போதிலும் வீதியின் இடமில்லாவிடின் இடமளிக்க முடியாது.
 3. நீங்கள் தொடர்ந்து வாகனத்தை முன்னெடுத்து போக தயாரான நிலையில் இருக்கும் போது முகப்பு விளக்குகளை ஒளியேற்றிக் காட்டினாலும் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை.அச் சந்தர்ப்பத்திலான சட்டத்திற்கு இணங்க வேண்டும. தொடர்ந்து போவதற்காக அபாய விளக்கை (Hazard Light)உபயோகிக்க வேண்டும்.
 4. இரு வாகனங்கள் ஒடுங்கிய வீதியிலோ அல்லது ஒரு வளைவிலோ மாறுகின்ற போது வலப்பக்க சைகை விளக்கை இயக்கி நேராகவோ போவது தவறாகும்
 5. வாகனத்தை ஓட்டிக்கொண்டு போகின்ற போது உங்களுக்கு எதிர்முகமாக வரும் அல்லது வீதியைக் கடக்கும் நபரொருவரையோ அல்லது ஒரு வாகனத்தை கண்டால் அவர்களுக்கு போன்றே உங்களின் சிந்தனையாகவும் இருப்புது ஏனையோர் நிறுத்திக்கொள்வார் என்பதேயாகும். இவ்வாறு நினைப்பதால் இருவரும் ஒன்றோடொன்று மோதிக்கொள்வீர்கள். (இவ் விபத்தை தவிர்த்துக்கொள்வதற்கு சந்தர்ப்பத்திற்கேற்ற சட்டத்தை பின்பற்றவும்).
 6. சாரதி ஆசனத்தில் முதுகை வளைத்துக்கொண்டு போக வேண்டியதில்லை. சுhரதி ஆசனத்தை தேவையானவாறு அமைத்துக்கொள்ளவும்.
 7. ஏனையோரைக் குற்றஞ்சாட்டுவதற்கு முன்னர் தான் பிழையில்லாதவரா என சிந்தியுங்கள்.